இந்திய திரையுலகில் அதிக பட்ஜெட்டில் உருவாகி, உலக அளவில் பல்வேறு நாட்டு மக்களாலும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் 2.0. உலக அளவில் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்த திரைப்படம், விரைவில் சீன மற்றும் ரஷ்ய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
சீனாவில் மட்டும் சுமார் 56,000 திரையரங்குகள் எனும் பிரமாண்ட எண்ணிக்கையில் இத்திரைப்படம் வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் காரணமாக சீன மொழி டிவி சேனல்களில் இத்திரைப்படம் விவாத பொருளாகி இருக்கிறது.
#2Point0InChina ..on 56000 screens ... premiere on June 28th .. grand release on July 12th @shankarshanmugh @akshaykumar @rajinikanth pic.twitter.com/WSzj0tQo6e— A.R.Rahman (@arrahman) June 4, 2019
அங்கு புகழ் பெற்ற முன்னணி செய்தி சேனலான 'CCTV 6' ல் இத்திரைப்படம் குறித்த சிறப்பு தொகுப்பு வெளியாகி இருந்த நிலையில், அதனை பதிவு செய்த ரசிகர்கள் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
News About #2Point0 in China News Channel.— RBSI RAJINI FAN PAGE (@RBSIRAJINI) June 8, 2019
PROUD MOMENT#2Point0inChina @LycaProductions @aditi1231 @shankarshanmugh @akshaykumar @iamAmyJackson @arrahman @srinivas_mohan @sri50 @karanjohar pic.twitter.com/R13ZoGLpIm
Social Plugin