தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் எனும் அமெரிக்க நிகழ்ச்சியில் வெற்றிபெற்று சுமார் 7 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக அள்ளியவர் லிடியன் நாதஸ்வரம்.
பியானோ இசைக்கருவியை அதிவேகமாக வாசிக்கும் திறமை, கண்ணை கட்டி வாசிக்கும் திறமை, ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசிக்கும் திறமை என உலக அளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்த லிடியன் தற்பொழுது இசையமைப்பாளராகி இருக்கிறார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இயக்கி நடிக்கும், பர்ரோஸ் எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் லிடியன், இசையமைப்பாளராகவும் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Social Plugin