அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்பட தயாரிப்பாளரான போனிகபூர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
பிரவீன் ஸ்யாம் சேதி எனும் நபர் கிரிக்கெட் போட்டியின் மூலம் தனது முதலீட்டை இரட்டிப்பாகி தருவதாக கூறி, தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட மேலும் இரண்டு நபர்கள், தன்னை மோசடி செய்து விட்டதாக ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவரும், பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான போனிகபூர், கடந்த 2018ம் ஆண்டு 'செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்' போட்டிகளின் மூலம் நல்ல லாபம் ஈட்டி தருவதாக கூறி தன்னை 2.5 கோடி முதலீடு செய்ய வைத்ததாகவும், ஆனால் ஒரு ரூபாய் கூட திருப்பி தரவில்லை என குறிப்பிட்ட புகாரில் தெரிவித்து இருக்கிறார்.
இதனை அடுத்து போனிகபூர், முஸ்தபா, பவான் ஜாங்கிட் ஆகிய மூவர் மீது பிரிவுகள் 420, 406, 120-B ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Social Plugin