Bill Dukes wants to act with Rajinikanth:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு பிரபல ஹாலிவுட் நடிகர் சமூக வலைதள பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.இந்திய சினிமாவில் உலக அளவில் ரசிகர்களை உடைய நடிகர்களுள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். தற்பொழுது AR முருகதாஸ் படத்தில் பிஸியாகி நடித்து கொண்டிருக்கிறார்.
நயன்தாரா காதாநாயகியாக கலக்க, அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருமாறு, ப்ரெடேட்டர், X மென் போன்ற படங்களில் நடித்த பில் டியூக்ஸ் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
@ARMurugadoss I do not speak #Tamil...but I could be @rajinikanth "long lost American Cousin" or #Nayanthara "Uncle" you know they say I can act!!! @sreekar_prasad & @santoshsivan can edit me in!!! @anirudhofficial can compose a #HitSong with stars from all over, what you think?— Bill Duke (@RealBillDuke) June 13, 2019
இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த நிலையில், ரசிகர்கள் அவரது பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவே எண்ணினர்.
ஆனால் நடிகர் 'பில் டியூக்ஸ்' தலைசிறந்த இந்திய பிரபலங்களின் படங்களில் நடிக்க தான் முயற்சித்து வருவதையும், அதற்கு சமூக வலைதள பதிவுகள் வாயிலாக பிரபலங்களை அணுகி வருவதாகவும் பதில் அளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Social Plugin