![]() |
#BIGGBOSSTAMIL-SEASON-3
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிலும் எதிரொலிக்க துவங்கி இருக்கிறது.ஆறுமாதங்களுக்கு பிறகு தற்பொழுதுதான் தமிழக தலைநகர் சென்னையில் லேசாக மழைபொழிய துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.
இப்படி ஒரு கடினமான நேரத்தில், பிக்பாஸ் போட்டியாளர்கள் தண்ணீரை அதிகம் செலவு செய்தால் சர்ச்சைகள் எழும் என்கிற காரணத்தினால் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
நீச்சல் குளத்தில் நீர் நிரப்பப்படாமல் இருந்தது துவங்கி, இன்று வெளியான ப்ரோமோவில், பயன்படுத்தும் நீருக்கு மீட்டர் வைத்து தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்தி இருக்கின்றனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.
இதற்கு பல போட்டியாளர்கள் கரகோஷம் எழுப்பி தங்களது பாராட்டுகளை தெரிவிக்க, போட்டியாளர் பாத்திமா பாபுவோ, இது கைதட்ட வேண்டிய விஷயம் அல்ல, தலை குனிய வேண்டிய விஷயம், என ஒரே போடாக போட்டு முதல் நாளிலேயே பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/5tD1s5Dk6W— Vijay Television (@vijaytelevision) June 24, 2019
Social Plugin