Ad Code

Responsive Advertisement

அதி புத்திசாலி அட்லீ..! விஜயையே வியப்பில் ஆழ்த்திய 'தளபதி 63' மாஸ்டர் பிளான்


நடிகர் விஜயின் படங்களுக்கு ரிலீஸை ஒட்டி தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில், அதனை தடுக்க முன்னெச்சரிக்கையாக அட்லீ எடுத்த முடிவு படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

விஜயின் படங்கள், அதுவும் இயக்குனர் அட்லீயின் படங்களுக்கு கதை திருட்டு பிரச்சனைகள் வருவது மிக மிக சகஜம். படம் முழுவதும் தயாராகும் வரை அமைதியாக இருந்து விட்டு,

படத்தின் ரிலீஸின் போது, 'கதை என்னுடையது' என சொந்தம் கொண்டாடிக்கொண்டு வந்து நிற்கும் இயக்குனர்களால், ரிலீஸின் போது எக்கச்சக்க பிரச்சனைகளை படக்குழு சந்திக்கும்.

இந்த பிரச்சனையை 'தளபதி 63' திரைப்படத்திலும் சந்திக்காமல் இருக்க, ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி வெளியான 'சக்தே இந்தியா' எனும் பாலிவுட் திரைப்பட ரீமேக் உரிமையை அட்லீ சுமார் 2 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார்.



அதாவது கதையை சொந்தம் கொண்டாடிக்கொண்டு எவரேனும் வந்தால், 'சாரி சார் இது ஹிந்தி பட ரீமேக்' என சொல்லி தப்பித்து கொள்ளலாம் என்பதே அட்லீயின் மாஸ்டர் பிளான்.