Actress Shalu Shammu Dance Video
தனது கவர்ச்சி நடனம் வைரலாகி எழுந்த சர்ச்சைகளை அடுத்து திருமண வரன்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக நடிகை ஷாலு சம்மு தெரிவித்து இருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்திருந்தனர் ஷாலு சம்மு. இத்திரைப்படத்தில் அவரது முகம் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான நடன வீடியோ அவரை மேலும் பிரபலப்படுத்தியது.
குறிப்பிட்ட வீடியோவில் பஜாட்டா எனும் வெளிநாட்டு வகை நடனம் ஆட, பார்த்தவர்களோ அவர் குடித்துவிட்டு நடனமாடியதாக விமர்சிக்க துவங்கினர். கூடுதலாக கவர்ச்சியும் அந்த நடனத்தில் மேலோங்கி இருக்க சகட்டு மேனிக்கு விமர்சனங்கள் வந்து குவிந்தது.
இதனை அடுத்து பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஷாலு, 'சும்மாவே சினிமா காரர்களுக்கு வரன் கிடைப்பது என்பது கடினம். அதில் என்னை பற்றி பரவிய வதந்திகளால் எனக்கு வந்த வரன்கள் அனைத்தும் பறிபோய்விட்டது. இப்போது எனக்கு திருமணம் ஆகும் என்ற நம்பிக்கையே இல்லை' என புலம்பி தள்ளி இருக்கிறார்.
Social Plugin