Friday, 21 June 2019

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்.. ஒரே பதிலால் மிரளவைத்த அஜித்..! இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்


நடிகர் அஜித்தின் செயல்பாடுகள் குறித்த ஒவ்வொரு தகவலும் தலைப்பு செய்திகள் தான். அந்த அளவிற்கு தனது செய்கைகளால் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் அஜித்.

திரையுலகினர், பொதுமக்கள், ரசிகர்கள் என இவர் உதவி செய்தவர்கள் ஏராளம். இவை அனைத்துமே தேவைகள் உடைய தகுதியானவர்களுக்கு மட்டும் அஜித் தேடி சென்று புரிந்த உதவிகள்.

அதே சமயம், போலியாக பண உதவி கேட்டு வருபவர்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்வதில்லை என்ற முடிவில் உறுதியாகவும் இருப்பவர். அப்படி அவர் உதவி செய்ய மறுத்த ஒருவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி, அஜித்தின் வீட்டில் இருந்த லாண்ட் லைன் இணைப்பு பழுதானத்தை அடுத்து அதனை சரி செய்ய, மத்திய அரசால் நடத்தப்படும் அந்நிறுவன ஊழியர் ஒருவர் சென்றிருக்கிறார்.

வழக்கமாக சாதாரண மக்களாக இருந்தால் அடாவடியாக ஒரு தொகையை வசூலித்து விடும் அவர்கள், அஜித்தின் வீடு என்பதை அறிந்ததும், 'பார்த்து ஏதாவது செய்யுங்கள் சார்' என வழிந்துகொண்டே கேட்டிருக்கிறார்.

அதற்கு, 'அரசாங்கம் தான் உங்களுக்கு சம்பளம் வழங்குகிறது அல்லவா, நான் ஏன் காசு கொடுக்கவேண்டும்' என விடாப்பிடியாக பதிலளிக்க, மன்னிப்பு கேட்டுவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார்.

என்றாலும், தனது மேனேஜர் மூலம் அந்நபர் குறித்து விசாரித்த அஜித், அவருக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதை அறிந்து, அவர் எதிர்பார்த்ததை விட ஒரு பெரிய தொகையை வழங்கி ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருந்திருக்கிறார்.     
Disqus Comments
'