Ad Code

Responsive Advertisement

இனி 'விஜய்-அஜித்தால்' நெருங்ககூட முடியாது! உச்சம் தொடும் சூப்பர் ஸ்டார்


தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே உலக வசூலில் முன்னிலையில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரது படங்களுக்கு வெளிநாட்டவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதே இதற்கு காரணம்.

என்றாலும் தமிழக அளவில், நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வசூலில் பின் தள்ள துவங்கியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, உலக வசூல் என்று வந்துவிட்டால் இவர்களால் தொடக்கூட முடியாது உச்சத்தில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம், உலக அளவில் சுமார் 850 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது. இதுவே பிரமாண்ட தொகை எனும் நிலையில் தற்பொழுது, சீன, ரஷ்ய மொழிகளில் இத்திரைப்படம் டப் செய்யப்பட்டு இந்த வருகிற ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. 

சீனாவில் மட்டும் சுமார் 56000 திரையரங்குகளில் இத்திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், வசூல் ரீதியில் இத்திரைப்படம் மேலும் பல சாதனைகளை தகர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.