Breaking News

சீனாவில் மிரட்டலாக வெளியாகும் '2.0'... ஒரு தமிழ் படத்துக்கு இத்தனை தியேட்டரா??? மிரளும் திரையுலகம்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, உலக சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் காரணமாக உலக வசூலில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களும் நெருங்க முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளியான 2.0 எனும் திரைப்படமும் உலக அளவில் 800 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படம் சீனாவில் ரிலீஸ் ஆக இருக்கும் தகவலும் அத்திரைப்பட குழுவினரால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

சீன மொழியில் டப் செய்யப்பட்டு வருகிற ஜூலை 12ம் தேதி சுமார் 56000 தியேட்டர்கள் எனும் பிரமாண்ட எண்ணிக்கையில் வெளியாக இருக்கும் இத்திரைப்படம், இந்திய சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவுக்கும் வசூலில் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.