மேலும் உலகம் முழுவதும் வெளியாகி, 850 கோடிக்கும் மேல் வசூலித்து தமிழ் சினிமாவிலேயே அதிக வசூல் புரிந்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.
இந்நிலையில் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கும் இத்திரைப்படம் சுமார் 10000 காட்சிகளுக்கு மேலேயும் திரையிடப்பட உள்ளது.
முன்னதாக பாலிவுட் திரைப்படமான நடிகர் ஆமீர் கானின் தங்கல் திரைப்படம் சீனாவில் 9000 காட்சிகள் திரையிடப்பட்டு சுமார் 150 கோடி எனும் பிரமாண்ட தொகையை வசூல் செய்தது.
2.0 திரைப்படம் அதை விட 1000 காட்சிகள் அதிகமாகவே திரையிடப்படும் நிலையில், 150 கோடிக்கும் மேலே வசூல் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. அப்படி வசூல் செய்தால் 1000 கோடி வசூலை தொடும் மூன்றாவது இந்திய திரைப்படம் எனும் சாதனையை 2.0 படைக்கும்.
Social Plugin