Ad Code

Responsive Advertisement

விஜயின் பிரமாண்ட சாதனையை தகர்த்த தல அஜித்..! உற்சாகத்தில் ரசிகர்கள்


நடிகர் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைத்து தரப்பிலும் ரசிகர்கள் இருப்பதனால், இவரது திரைப்படங்களை வாங்க டிவி சேனல்களின் மத்தியில் கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது.

தியேட்டர்களில் மட்டுமல்லாது, இவரது திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு முறையும் பார்வையாளர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டு விடுவதே இத்தகைய சூழ்நிலைக்கு காரணம்.

உதாரணமாக கடந்த குடியரசு தின விழா ஸ்பெஷலாக சன்டிவியில் ஒளிபரப்பான சர்கார் திரைப்படம், சுமார் 1 கோடியே 70 லட்சம் பார்வையாளர்களை பெற்று 2019ல் ஒளிபரப்பட்ட திரைப்படங்களிலேயே  முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் சர்காரின் இந்த மாபெரும் சாதனையை முறியடித்துள்ளது அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம். உழைப்பாளர்கள் தின சிறப்பு திரைப்படமாக நேற்று ஒளிபரப்பான விஸ்வாசம், சுமார் 1 கோடியே 75லட்ச பார்வையாளர்களை பெற்று விஜயின் சாதனையை தட்டி தூக்கி இருக்கிறது.