Ad Code

Responsive Advertisement

விவசாயிகளை வைத்து விளம்பரம் தேடும் விஷால்? சொன்னபடி செய்யப்பட்டதா உதவி?


நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'அயோக்யா' திரைப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட் விறபனையில் இருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு வழங்க இருப்பதாக அறிவித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.  

இந்நிலையில், அவர் நடிப்பில் உருவான துப்பறிவாளன் திரைப்படத்தின் போதும், இதே போல அவர் வெளியிட்ட அறிவிப்பின் பிறகும், விவசாயிகளுக்கு சொன்னபடி உதவி செய்யவில்லை என ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், படத்தினை விநியோகஸ்தர்கள் பெற்றுவிட்ட பிறகு, டிக்கெட் விற்பனை, லாபம் என அது அவர்களையே சேரும் எனும் பட்சத்தில், 'எப்படி அவர்களிடம் இருந்து இவர் வசூல் செய்வார்?', 'சும்மா விளம்பரத்திற்காக விவசாயிகளை அவர் பயன்படுத்தி கொள்கிறார்' என திரையுலகினர் பலரும் அவரை விமர்சித்து  வருகின்றனர்.