விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளம் தமிழகத்தில் உண்டு. இதன் காரணமாக யார் பெரிது என்ற போட்டா போட்டியும், இந்த ரசிகர்களுக்கிடையே எழுவதும் வாடிக்கை.
தாங்கள்தான் கெத்து என நிரூபிக்க எந்த எல்லைக்கும் சென்று, ரசிகர்கள் செய்யும் விஷயங்கள் பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்திய சம்பவங்கள் ஏராளம்.
அவற்றுள், நடிகர் விஜயின் சர்கார் திரைப்படத்தையொட்டி சுமார் 175 அடி உயர கட்டவுட் வைத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்திருந்தனர் கேரளாவின் கொள்ளம் பகுதியை சார்ந்த விஜய் ரசிகர்கள் சிலர்.
இந்த உயரத்திற்கே குறிப்பிட்ட கட்டவுட் தாக்குப்பிடிக்க முடியாமல் விட்டது. இப்படி இருக்க அதனை விட பிரமாண்டமாக சுமார் 215 அடியில் கட்டவுட் வைத்து மிரள வைத்து இருக்கின்றனர் திருவள்ளூரை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் சிலர்.
Social Plugin