ரசிகர் மன்றங்கள் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சில ஆர்வ கோளாறு ரசிகர்களின் விபரீத செயல்கள் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அவப்பெயரை பெற்று தந்து விடுகிறது.
இப்படியொரு சம்பவம் நடிகர் விஜயின் ரசிகர்களுக்கும் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. அரசியலில் களம் காணாவிட்டாலும் தனது 'மக்கள் இயக்கம்' மூலமாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருபவர் விஜய்.
இதனால் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தமிழகத்தில் உள்ளனர். இந்நிலையில் உழைப்பாளர் தின ஸ்பெஷலாக இவரது 'தெறி' திரைப்படம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் திரையிடப்பட்டது.
இதற்கு பல்வேறு இடங்களில் இருந்து விஜய் ரசிகர்கள் வந்திருந்த நிலையில், ரசிகர் ஒருவர் குடித்து விட்டு தியேட்டரின் மேல் ஏறி நடனமாடிய சம்பவமும் நிகழ்ந்தேறியது.
கரணம் தப்பினால் மரணம் எனும் ஆபாத்தான உயரத்தில் நின்று கொண்டு விஜய் ரசிகர் நடனமாடிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வலம்வருகிறது.
OMG.... This Man.. 😣😱— T F C™ (@TFC_Off) May 1, 2019
Kola Veriyan... 🔥🔥🔥🔥🔥🔥
Be Safe Friends.. 🙏#DiwaliSampleTheriThiruvizha pic.twitter.com/veTTI6K8IQ
Social Plugin