Ad Code

Responsive Advertisement

இதிலும் அஜித்துக்கு இரண்டாம் இடம்தான்!!! மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத ஜாம்பவான்களாக வலம்வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமும் மிகவும் வலியது.

இதனால் இந்த நடிகர்கள் சம்பந்தமான சிறு சிறு விஷயங்களிலும் 'யார் நம்பர் 1?' என புள்ளிவிவரங்களை சேகரிக்க துவங்கி விடுகின்றனர் ரசிகர்கள்.

திரைப்பட டீசர் லைக்ஸ் துவங்கி, வசூல் வரை 'நீயா நானா' என முட்டி மோதிக்கொள்ளும் ரசிகர்களின் புள்ளிவிவர அடிப்படையில் பெரும்பாலானவற்றில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய் தான்.

இப்படி நடிகர் விஜய் முதல் இடம் பிடித்துள்ள விஷயங்களில், சமூக வலைத்தளமான டிவிட்டரில் அதிகம் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற பிரபலம் என்ற சாதனையும் இணைந்துள்ளது.

அதாவது சென்ற ஆண்டு நடிகர் விஜயின் பிறந்தநாளின் போது, சுமார் 18 லட்ச பதிவுகள், #HBDThalapathyVIJAY எனும் ஹேஸ்டேக் வாயிலாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நேற்று தன் பிறந்த நாளை கொண்டாடிய அஜித், # #HBDIconicThalaAJITH எனும் ஹேஸ்டேக் வாயிலாக 13 லட்ச பதிவுகளை மட்டுமே பெற்று தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார்.