அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த பைரவா போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் வெங்கடரமன ரெட்டி. இவர் விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையும் தயாரித்து இருக்கிறார்.
துரதிஷ்டவசமாக அண்மையில் உடல் நலக்கோளாறு காரணமாக தனது 75 வயதில் இறந்துவிட, இவரது இறுதி சடங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் கொடுமை என்னவென்றால், இப்படி பெரிய பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்த இவரது இறுதி சடங்கில், நடிகர் ஸ்ரீமன் தவிர எந்த திரையுல பிரபலங்களும் கலந்து கொள்ளவில்லை என்பதுதான்.
இந்த தகவல் அறிந்த பலரும், அவரது இறுதி சடங்களில் கலந்துகொள்ளாத நெருக்கமான பிரபலங்களை விமர்சித்து வருகின்றனர்.
Social Plugin