தமிழ் சினிமாவில் எதிர்மறை கதாபாத்திரங்களையும் தயங்காது ஏற்று நடித்து, நாயகிகளுக்கு இணையான மவுசை பெற்றவர் நடிகை வரலக்ஸ்மி.
சர்க்கார் திரைப்படத்தில் வில்லியாக நடித்து கலக்கியவர், சேசிங் எனும் திரைப்படத்தில் ஆக்சன் நாயகியாக நடித்து வருகிறார். வீர குமார் இயக்கும் இத்திரைப்படத்தின் சண்டை காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டது.
நாயகி ஆக்சனில் கலக்குவது போல உருவாகி இருந்த அந்த காட்சியில், டூப் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி, வரலக்ஸ்மி நடித்திருந்தார். குறிப்பிட்ட காட்சியின் காணொளியினை அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Girls just wanna have fun.!!!! Heheheh so much fun doing my own stunts for my movie #chasing totally worth all the hard work.. thank you #supersubbarayan master.. directed by @Veeraku94850140 dop @krishnasamy_e #shootinprogress #fightsequence #norope please don’t try this at home pic.twitter.com/3eUgLykPDt— varalaxmi sarathkumar (@varusarath) May 29, 2019
Social Plugin