Ad Code

Responsive Advertisement

தொடர் தோல்வி எதிரொலி!!! சிவகார்த்திகேயனுக்கு நோ சொல்லும் நடிகைகள்


சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் மின்னல் வேகத்தில் முன்னணி நடிகராக அவதாரம் எடுத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். துரதிஷ்ட வசமாக இவர் நடித்த, வேலைக்காரன், சீமராஜா,  மிஸ்டர் லோக்கல் திரைப்படங்கள் தொடர் தோல்வியை கொடுக்க அவரது மார்க்கெட் சரிவை சந்தித்து உள்ளது.

இது மட்டுமல்லாது, முன்னதாக சிவகார்த்திகேயனுடன் நடிக்க தூது விட்டு கொண்டிருந்த முன்னணி நடிகைகள் பலர், இந்த தொடர் தோல்விகளை காரணம் காட்டி அவரது பட வாய்ப்புகளை மறுத்து வருவதாகவும் ஒரு தகவல் கோலிவுட்டில் வளம் வருகிறது.

இதனை உண்மை நிரூபிக்கும் விதத்தில், சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கும் சிவகார்த்தியேயனின் திரைப்படத்தில் 'அணு இம்மானுவேல்' எனும் தெலுங்கு நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.