Friday, 17 May 2019

எல்லை மீறிய இயக்குனர்!!! செருப்பை காட்டிய பாடகி!!! பரபரப்பை கிளப்பிய பாலியல் குற்றச்சாட்டு


திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பலரும், தைரியமாக பேச துவங்கி இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி பிரபலங்களின் உண்மை முகத்தை வெளிச்சதிற்கு கொண்டுவந்து கொண்டிருக்கும் சமயத்தில், பிரபல தெலுங்கு திரையுலக பாடகி ஒருவரும் பரபரப்பனா குற்றச்சாட்டு ஒன்றினை வைத்து இருக்கிறார்.

தெலுங்கு திரைப்படங்களில் பாடி, ஆந்திர அரசின் பின்னணி பாடகர்களுக்கான நந்தி விருதை பெற்ற பெருமைக்கு உரியவர் பிரணவி. சமீபத்தில் திரையுலகில் பாலியல் கொடுமைகள் குறித்து பேசிய அவர், பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் தனக்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.



தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர், தன் படத்தில் பாட வாய்ப்பு தருவதாக கூறி இசைக்கலைஞர்கள் எவருமே இல்லாத ஸ்டூடியோவுக்கு அழைத்ததாகவும், விபரீதத்தை உணர்ந்து வெளியேறுவதற்குள் குறிப்பிட்ட இயக்குனர் எல்லை மீற ஆரம்பித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவர், தனது செருப்பை கழட்டி காட்டி அங்கிருந்து தப்பித்து ஓடிவந்துவிட்டதாக அதிர்ச்சிகர தகவலை பகிர்ந்திருந்தார்.      
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();