திரைத்துறையில் இயக்குனர், நடிகர் என பல்வேறு அவதாரங்களை கொண்ட நடிகர் அவர். ஆரம்ப காலங்களில் கிசு கிசுக்கள் ஏதும் இன்றி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவர், தற்பொழுது தொடர்ந்து நடிகைகளுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
திருமணத்திற்கு பின்பும், முன்னணி நடிகை ஒருவருடன் காதலில் விழுந்து இரண்டாம் திருமணம் வரை சென்ற அவர், தமிழ் திரையுலகின் உச்ச நடிகருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவருடனும் ஊர் சுற்றி கிசு கிசுக்களில் சிக்கி இருந்தார்.
இந்த பஞ்சாயத்துகள் எல்லாம் ஒரு புறம் இருக்க, தற்பொழுது மீண்டும் ஒரு முன்னணி நடிகை ஒருவருடன் நெருக்கம் காட்டி வருவதாக கிசு கிசுக்கின்றன சினிமா வட்டாரங்கள்.
இதற்கு ஏற்கனவே இரண்டு படங்களில் நடிகையுடன் ரொமான்ஸ் செய்து விட்ட அவர், தான் நடிக்க இருக்கும் பிற படங்களிலும் அவரையே விடாப்பிடியாக சிபாரிசு செய்து வருவதும் காரணமாக கூறப்பட்டு வருகிறது.
Social Plugin