Friday, 10 May 2019

'ஜெயம் ரவி'க்காக படுகவர்ச்சி...! சூட்டை கிளப்பும் காஜல் அகர்வால்


நடிகர் ஜெயம்ரவியுடன் காஜல் அகர்வால் நடிக்கும் முதல் திரைப்படம் கோமாளி. புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி  வரும் இத்திரைப்படத்தில் காஜல் அகர்வாலின் கவர்ச்சி அவதார புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

9 மாறுபட்ட வேடங்களில் ஜெயம் ரவி தோன்றி இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல் காட்சி ஒன்று அண்மையில் படமாக்கப்பட்டது. அதில் மஞ்சள் நிற புடவையில், படு கிளாமராக காஜல் அகர்வால் தோன்றி இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.



முன்பு கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும், தற்பொழுது அதனை தவிர்த்து நாயகிக்கும் முக்கியதுவம் உள்ள கதைகளில் நடிப்பது என காஜல் அகர்வால் முடிவு செய்திருந்ததாக திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் ஜெயம் ரவிக்காக மீண்டும் அவர் கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருப்பது, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();