Ad Code

Responsive Advertisement

IPL : மும்பை அணி ஏமாத்திட்டாங்க!!! கொந்தளிக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்


2019ம் ஆண்டின் இந்தியன் பிரிமியர் லீக், 20 ஓவர் போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது.

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோணி சர்ச்சையான முறையில் அவுட் ஆனது குறித்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், நடன இயக்குனர் மற்றும் நடிகையான காயத்ரி, குஷ்பு என பலரும் மூன்றாவது அம்பயரின் தவறான முடிவினால் தோணி ஆட்டம் இழந்ததை சுட்டி காட்டி, மும்பை அணியின் வெற்றியினை விமர்சித்து வருகின்றனர்.