தமிழ் திரையுலகில் ஒரு நாயகியால் இத்தனை ஆண்டுகள் வரை நிலைக்க முடியுமா என பலர் வியக்க, ஆணி அடித்தாற்போல் 17 வருடங்கள் கழித்தும் முன்னணியில் இருப்பவர் நடிகை திரிஷா.
இவர் அண்மையில் தனது 36வது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருந்தார். இந்நிலையில் திரைத்துறையை சார்ந்த பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து இருந்தனர்.
அவற்றுள் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகையான சார்மி கௌர் உடைய பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பிட்ட பதிவில், 'அரசாங்கமே ஓரின திருமணத்தை சட்டபூர்வமாக்கி விட்டது. அதனால் நீண்ட நாட்களாக உன் ஒப்புதலுக்கு காத்திருக்கும் என்னை திருமணம் செய்து கொள்வாயா?' என கேள்வி எழுப்ப,
நடிகை திரிஷாவும் விளையாட்டாக, 'உனக்கு ஏற்கனவே ஓகே சொல்லிவிட்டேன்' என பதிலளித்திருந்தார். என்றாலும் வழக்கம் போல ஒரு சில ரசிகர்கள், குறிப்பிட்ட நடிகைகளை சகட்டு மேனிக்கு விமர்சிக்க துவங்கிவிட்டனர்.
😂😂thank you and i said YES already😐 @Charmmeofficial https://t.co/poMrLQg3YF— Trish Krish (@trishtrashers) May 4, 2019
Social Plugin