அந்நியன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரத்தை நடிக்க வைக்க படக்குழு செய்த விபரீதம் குறித்த அதிர்ச்சிகர தகவல் இப்போது வெளிவந்துள்ளது.
திரையில் குழந்தைகள் நடிப்பதை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவது உண்டு. இதனாலேயே மிக கடினமான செயலாக இருந்தாலும், கஷ்டப்பட்டு குழந்தை நட்சத்திரங்களை நடிக்க வைக்கின்றனர் திரையுலகினர்.
அப்படி ஷங்கர் இயக்கத்தில் உருவான அந்நியன் திரைப்படத்தில், விக்ரமின் சகோதரியாக நடித்திருந்தார் திவ்யா நாகேஷ் எனும் குழந்தை நட்சத்திரம். கதைப்படி அவர் கதாபாத்திரம் இறந்து, இறுதி சடங்கு நடைபெறும் காட்சி படமாக்கப்பட இருந்தது.
ஆனால் குறிப்பிட்ட குழந்தை நட்சத்திரமோ, இந்த காட்சியில் நடித்தால் பள்ளி தோழிகள் என்னை 'ஆவி' என கிண்டல் செய்வார்கள் என்று கூறி நடிக்க மறுத்துவிட்டாராம். இதனால் வேறுவழியின்று அவர் அருந்த இருந்த பழச்சாறில் தூக்க மாத்திரையை கலந்து அவரை தூங்க வைத்து குறிப்பிட்ட காட்சி படமாக்கப்பட்டதாம்.
Social Plugin