Thursday, 2 May 2019

விஜயின் படத்தை தியேட்டரில் பார்க்க மாறுவேடத்தில் வந்த அஜித்!!! இயக்குனர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் அஜித் தனது 48வது பிறந்தநாளை நேற்று கோலாகலமாக கொண்டாடி இருந்தார்.

இதனையொட்டி அவரை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் நேற்று வெளியாகி இருந்தது. இந்நிலையில் விஜயின் படத்தினை அஜித் தியேட்டரில் பார்த்த சுவாரஸ்ய தகவல் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார் பிரபல இயக்குனர் சரண்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'திரைத்துறையில் ஒருவொருக்கொருவர் போட்டி என்றாலும், பெரும்பாலான நடிகர்களை போல ஒருவொருக்கொருவர் இடையூறு கொடுப்பவர்கள் அல்ல விஜய் அஜித்.

நானும் அஜித்தும் பலமுறை தியேட்டரில் ஒன்றாக படங்கள் பார்த்திருக்கோம். அதில் நடிகர் விஜயின் வில்லு திரைப்படமும் அடக்கம். அப்பொழுது ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டுவிடக்கூடாது என்ற காரணத்தினால் மாறுவேடத்தில் வந்திருந்தார்.' என தெரிவித்து இருந்தார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();