தமிழ் சினிமாவில் பல நடிகைகளுடன், அவுட்டிங் டேட்டிங் என ஜாலியாக சுற்றி, 'பிளே பாய்' நடிகர் என பெயர் எடுத்தவர் ஆர்யா. பல்வேறு காதல் சர்ச்சைகளுக்கு பின்பு இவர் இளம் நடிகை சாயீஷாவை கடந்த மார்ச் மாதம், காதல் திருமணம் செய்து கொண்டார்.
இப்படி தனக்கு போடப்பட்ட கால்கட்டை தொடர்ந்து, தனது பிளே பாய் சேட்டைகளை கைவிட்டுவிட்டு, சமத்தாக 'மனைவி சொல்லே மந்திரம்' என தனது வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
மேலும் சக நடிகைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் போது டார்லிங், செல்லம் என கொஞ்சும் வழக்கம் உடையவரான ஆர்யா, திருமணத்திற்கு பின்பு மிகவும் அடக்கியே வாசிக்கிறார்.
உதாரணமாக, நடிகை திரிஷாவை 'குஞ்சிமணி' என சமூக வலைதள பதிவுகளில் செல்லமாக அழைப்பவரான அவர், தற்பொழுது அந்த வார்த்தையை உபயோகிப்பதையே நிறுத்தியிருக்கிறார்.
My dear Kunjumani @trishtrashers and my darling Mwahhh @ihansika 😍😍 to release the second look Poster of #Ghajinikanth today at 6 pm 💪💪💪@sayyeshaa @santhoshpj21 @ballu_1987 @StudioGreen2 👍👍👍 pic.twitter.com/FfZKSCEtrS— Arya (@arya_offl) December 13, 2017
ஆர்யாவின் இந்த மாற்றத்தை காமெடி நடிகர் சதீஸும் கலாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.
After Marriege andha word a solla maattaaru pola🤔🤭 https://t.co/P8FVqX7mu2— Sathish (@actorsathish) May 4, 2019
Social Plugin