Ad Code

Responsive Advertisement

படமே நடிக்கலைனாலும் நான் தான் கிங்கு!!! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வடிவேலு


அரசியல் சர்ச்சைகளினால் படவாய்ப்புகளை இழந்து, இன்று நகைச்சுவை பிரிவில் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பவர் வடிவேலு.

சமீபத்தில் புதிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவர் நடித்த பழைய திரைப்பட காட்சிகள் மீம்ஸ் வடிவில் அன்றாடம் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறது.

இப்படி இருக்க, இவர் நடித்த 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் காண்டிராக்டர் நேசமணி கதாபாத்திரம் தற்பொழுது இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களை ஆட்டிப்படைத்து வருகிறது.


குறும்புக்கார நெட்டிசன் ஒருவர், பொறியியல் சம்பந்தமான சமூக வலைதள பக்கத்தில், சுத்தியல் குறித்து விளக்க, காண்டிராக்டர் நேசமணியை உள் இழுக்க, அதனை அடிப்படையாக வைத்து 'Pray-For-Nesamani' எனும் ட்விட்டர் டாக் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வருகிறது.