Monday, 8 April 2019

மெகா ஹிட் திரைப்படத்தை தவறவிட்டு புலம்பிய விஜய்!!! இயக்குனர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்


தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்கள், தங்களது சினிமா பயணத்தில், 'தனக்கு பிடிக்கவில்லை' எனக்கூறி நிராகரித்து, பின்னர் அந்த வாய்ப்பு வேறொருவருக்கு சென்று மாபெரும் வெற்றி பெற்ற அனுபவங்கள் இருக்கும்.

அப்படியொரு நிகழ்வு நடிகர் விஜயின் திரைத்துறை பயணத்திலும் வந்து சென்று இருக்கிறது. சுந்தர் C இயக்கத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு ஆகியோர் நடித்து மெகா ஹிட் அடித்த திரைப்படம் வின்னர்.

உண்மையில் இத்திரைப்படத்தின் கதை, நடிகர் விஜயை மனதில் வைத்து எழுதப்பட்ட ஒன்றாம். இயக்குனர் சுந்தர் C, விஜயை பார்த்த இந்த கதையை கூறிய போது, அந்த சமயத்தில் நிராகரித்து விட்டாராம்.

அதனால் இந்த திரைப்படம் பிரசாந்த் நடித்து வெளியானது. படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்ற நிலையில், இந்த திரைப்படத்தை பார்த்த விஜய், 'இப்படியொரு நல்ல படத்தை தவறவிட்டு விட்டோமே' என புலம்பி இருந்தாராம்.

இந்த தகவலை நடிகர் விஜய்க்கு நெருக்கமான, இயக்குனர் செல்வபாரதி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார்.
Disqus Comments
'