Ad Code

Responsive Advertisement

பிளாப் ஆன படத்துக்கு 100வது நாள் கொண்டாட்டமா..? விஸ்வாசத்தை விமர்சிக்கும் ரசிகர்கள்


சிவா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் விஸ்வாசம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்த இதன் நூறாவது நாள் அண்மையில் ரசிகர்களாலும், படக்குழுவினராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இப்படி இருக்க பிளாப் ஆன திரைப்படதிற்கு 100வது நாள் கொண்டாட்டமா? என கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் ரசிகர் ஒருவர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள, பஞ்சாயத்து பதிவில், வெற்றி படம் என்றால் தமிழகம் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெற்ற ஒன்றாக இருக்க வேண்டும்.

தமிழ் தவிர, வெளியான பிற மொழிகளில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்த இப்படத்தை வெற்றி படமாக எடுத்து கொள்ள முடியாது எனவும் அந்த பதிவில் குறிப்பிட்ட ரசிகர் தெரிவித்து அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்.