Ad Code

Responsive Advertisement

நடிகர் விஜயை பார்த்தால் கட்டி பிடிச்சிருவேன்... விஜய் டிவி ப்ரியங்கா ஓப்பன் டாக்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வருபவர் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுள் சினிமா பிரபலங்களும் அடக்கம்.

விஜய் மீதான தங்களது பார்வை, ஆசை ஆகியவற்றை நேர்காணலிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ இத்தகைய பிரபலங்கள் வெளியிட்டு வரும் நிலையில், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான பிரியங்காவும் விஜய் குறித்து பேசி இருக்கிறார்.

சமீபத்தில் அவர் கலந்து கொண்டிருந்த நேர்காணல் ஒன்றில், பிரியங்காவிடம், 'நடிகர் விஜய் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள்?' என கேள்வி எழுப்பப்பட்டது.

Also Read | ஹனிமூனை என்ஜாய் செய்யும் 'ஆர்யா-சாயீசா'... ஜோடியாக வெளியான முதல் புகைப்படம்

இதற்கு, 'தளபதி என் நிகழ்ச்சிக்கு வந்தால் டக்குனு அவரை போய் கட்டிப்பிடித்து கொள்வேன். அந்த அளவிற்கு அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உள்ளது.

இதுவரை அவரை ஒரே ஒருமுறை, அவரது அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன். அவரை பார்த்த பதற்றத்தில் கையில் வைத்திருந்ததையெல்லாம் கீழே போட்டுவிட்டேன். அவரோ அமைதியாக, கூல்டவுன், காஃபி குடிங்க என தனது பாணியில் தெரிவித்தார். அவர் சொன்ன வார்த்தைக்காக காஃபியே குடிக்காத நான், அன்று கடகடவென குடித்தேன்' என நகைச்சுவையாக பேசி இருந்தார்.