Monday, 8 April 2019

அஜித் ரசிகர்களால், பெண் வேடத்தில் நடிக்க தயங்கிய விஜய்..! இயக்குனர் வெளியிட்ட தகவல்


நடிகர் அஜித் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பயந்து, தளபதி விஜய் பெண் வேடத்தில் நடிக்க தயங்கிய சம்பவம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகில் இன்று முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தே நிஜ வாழ்வில் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் அப்படி இல்லை.

சின்ன சின்ன விஷயங்களையும் பஞ்சாயத்தாக்கி விடும் இவர்களால், இந்த நட்சத்திரங்கள் எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

இந்நிலை 'ப்ரியமானவளே' திரைப்படத்தின் போது நடிகர் விஜய்க்கும் ஏற்பட்டு இருந்திருக்கிறது. அந்த திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடிகர் விஜய் பெண் வேடத்தில் தோன்றி இருப்பார்.

அப்படி அவரை நடிக்க வைக்க, படுதீவிரமாக முயற்சி செய்ததாகவும், ஆனால் நடிகர் விஜயோ, 'நான் இப்படி நடிக்க போவது தெரிந்தாலே வாருவாங்க, நீங்க வேற' என அஜித் ரசிகர்களை எண்ணி தயங்கியதாக அப்பட இயக்குனர் செல்வபாரதி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

அந்த சமயத்தில் நடிகர் விஜயின் மகனும் பிறந்ததால், மகிழ்ச்சியில் இருந்த விஜயை எப்படியோ அந்த காட்சியில் நடிக்க வைத்ததாகவும், நினைத்தது போலவே அவர் பெண் வேடத்தில் நடித்தது நன்றாகவும் பேசப்பட்டதையும் அதில் நினைவு கூர்ந்திருந்தார்.     
Disqus Comments
'