Ad Code

Responsive Advertisement

'பாஜக'விற்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்... கட்சிக்கொடிகளுடன் பறந்த விஜய் மக்கள் இயக்க கொடி


'பாஜக'விற்கு எதிராக சிவகங்கை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் நடிகர் விஜயின் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்கார் உள்ளிட்ட நடிகர் விஜயின் திரைப்படங்களுக்கு, ஆளும் கட்சியான அதிமுக தரப்பில் இருந்து இடையூறுகள் வந்திருந்த நிலையில், வருகிற லோக்சபா தேர்தலில் விஜய் ரசிகர்கள், அக்கட்சிக்கு அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிராக நிற்கும் கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.


இப்படி இருக்க, சிவகங்கை பகுதி விஜய் ரசிகர்களோ, பாஜகவின் H.ராஜாவிற்கு எதிராக களமிறங்கியுள்ள வேட்பாளர் கார்த்தி அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில், விஜய் மக்கள் இயக்க கொடிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், விஜய் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.