ஆளும் கட்சியான அதிமுக, ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு ஆளாகி இருந்தது. அவற்றுள் நடிகர் விஜயின் படங்களுக்கு இடையூறு அளித்த பஞ்சாயத்தும் ஒன்று.
விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தில், இடம்பெற்று இருந்த அரசின் இலவச பொருட்களை மக்கள் எரிக்கும் காட்சியை கண்டித்து, பல்வேறு இடங்களில் நடிகர் விஜயின் போஸ்டர் கிழிக்கப்பட்டது.
மேலும், திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் ஒரு சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடும் கோபத்திற்கு ஆளாகி இருந்த விஜய் ரசிகர்கள், வருகிற லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்காக, அதிமுக கட்சியின் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிப்பது, கண்டன போஸ்டர்கள் ஓட்டுவது என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் இப்படி என்றால், விஜயின் பெண் ரசிகை ஒருவர் செய்த செயல் மிகவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. 'இது தளபதி ரசிகை இல்லம், அதிமுக வினர் யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம்' என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து அவர் போஸ்டர் ஒட்டியுள்ள நிலையில்,
அது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் பிற விஜய் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Social Plugin