Friday, 12 April 2019

ஓட்டு கேட்க என் பெயரை பயன்படுத்துவதா..? ரசிகர்களால் கடும் கோபத்தில் விஜய்


அரசியல் கட்சிகளுக்கு இணையாக, தமிழகத்தில் நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது நடிகர் விஜயின் மக்கள் இயக்கம். 2004ம் ஆண்டு ரசிகர் மன்றத்திலிருந்து இயக்கமாக மாற்றப்பட்ட இந்த அமைப்பு, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் அரசியலில் ஈடுபாடு உள்ள விஜய் ரசிகர்கள், தாங்கள் ஆதரவு அளிக்கும் கட்சிக்கு விஜயின் மக்கள் இயக்க கொடிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பது நடிகர் விஜயின் காதிற்கு சென்றிருக்கிறது.

இதனை கேள்வி பட்டு, கடும் கோபத்திற்கு ஆளான விஜய். இனி அரசியல் சார்த்த எந்த ஒரு நிகழ்வுக்கும், தனது பெயரையோ, மக்கள் இயக்க கொடியையோ பயன்படுத்த கூடாது என அதிரடியாக கட்டளை இட்டு இருக்கிறாராம்.

நடிகர் விஜயின் இந்த முடிவு, விஜய் ரசிகர்களை வைத்து ஆதாயம் தேட நினைத்த ஒரு சில அரசியல்வாதிகளை அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது. 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();