Ad Code

Responsive Advertisement

ரசிகர்களின் மீது இவ்வளவு அன்பா.? புல்லரிக்க வைத்த நடிகர் விஜயின் வார்த்தைகள்


தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் நடிகர்களுள் ஒருவர் விஜய். இவரது வளர்ச்சிக்கு அவரின் ரசிகர்களின் பங்கும் அளப்பரியது.

ரசிகர்களும் நடிகர் விஜயின் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை, ஒவ்வொரு திரைப்பட ரிலீஸின் போதும் நிரூபித்துதான் வருகிறார்கள். இந்நிலையில் இப்படி பட்ட ரசிகர்கள் குறித்து நடிகர் விஜய் கூறிய புல்லரிக்க வைக்கும் வார்த்தைகளை நடிகர் சதீஸ் வெளியிட்டு இருக்கிறார்.


அண்மையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த காமெடி நடிகர் சதீஸ், 'நடிகர் விஜய் எப்பொழுதுமே அவரது ரசிகர்கள் குறித்துதான் பேசி கொண்டிருப்பார். அவர்களின் மீது அவரும் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்.

Also Read | நடிகர் விஜயை பார்த்தால் கட்டி பிடிச்சிருவேன்... விஜய் டிவி ப்ரியங்கா ஓப்பன் டாக் 

எனது படம் ஓடுகிறதோ, ஓடவில்லையோ, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனோ துக்கத்தில் இருக்கிறேனோ, அப்பொழுதெல்லாம் என் குடும்பம், நண்பர்கள் கூட இருப்பது சகஜம் தான்.

ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும்  சுயலமும் இன்றி என் சோக, துக்கங்களை தங்களுடையதாக பார்ப்பவர்களை, எனக்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத என் ரசிகர்கள்தான்' என தெரிவித்து நடிகர் விஜயின் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.