சிம்பு, ஆர்யா என பல காதல் விவகாரங்களினால் சர்ச்சையில் சிக்கி பிளே பாய் நடிகர்கள் என திரையுலகினரால் அழைக்கப்படுபவர்களின் வரிசையில் இணைய இருக்கிறாராம் இந்த இளம் நடிகர்.
விரைவில் வெளியாக உள்ள R.K.நகர் திரைப்படத்தில் நாயகனான நடிகர் வைபவ், சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி போலீசிடம் சிக்கியது, பிட்டு படம் பார்த்தது என பல சர்ச்சையான விஷயங்கள் குறித்து பேசி இருந்தார்.
போகிற போக்கில் என் ஒரு நண்பனுக்கு காதலே அமையவில்லை, இன்னொரு நண்பனுக்கு வாரம் ஒரு காதல் அமைகிறது என மேலோட்டமாக பேசி இருந்தார்.
அவரது நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்களுள், நடிகர் பிரேம்ஜி தான் திருமணத்திற்கும் காதலுக்கும் பெண் கிடைக்காமல் கஷ்டப்படுபவர், அப்படி பார்த்தல் 'வாரம் ஒரு காதல் செய்யும் நண்பர் என, அஞ்சலி, ஜனனி அய்யர் என அடுத்தடுத்து காதல் சர்ச்சைகளில் சிக்கிய ஜெய்யை தான் குறிப்பிடுகிறார்' என தங்களது கணிப்புகளை அள்ளி வீசி வருகின்றனர் ரசிகர்கள் .
Social Plugin