Ad Code

Responsive Advertisement

படு மாஸான பெயருடன் 'தலைவர் 167'... முருகதாஸ் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு


ரஜினி முருகதாஸ் கூட்டணியில் உருவாக இருக்கும் 'தலைவர் 167' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

ரஜினி, நயன்தாரா நடிக்க, லைகா ப்ரொக்சன் தயாரிப்பில் ரஜினி போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பெயர் 'தர்பார்' என இத்திரைப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ஏற்கனவே இந்த பர்ஸ்ட் லுக் புகைப்படத்திற்கான போட்டோசூட் புகைப்படங்கள் லீக் ஆன நிலையில், அவசர அவசரமாக படக்குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.