போனிகபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், தற்பொழுது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வரவும் இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு முன்பே, H.வினோத் இயக்க இருந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார் அஜித்.
ஆனால் நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கின் படி, போனிகபூர் தயாரிப்பில் நடிக்கும் சூழல் ஏற்படவே, வேறு வழியின்றி பிங்க் திரைப்பட ரீமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து கொடுத்தார்.
இதனை தொடர்ந்து உங்கள் கதையில் நடிக்கிறேன் என, H.வினோத்திற்கு அஜித் வாக்களித்திருந்த நிலையில், அவரது வொர்கிங் ஸ்டைல் தனக்கு சரிப்பட்டு வராது என பின்வாங்கிவிட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது.
இப்படி இருக்க, நேர்கொண்ட பார்வை திரைப்பட கடைசி கட்ட படப்பிடிப்பின் போது, H.வினோத்தின் திறமையை கண்டு வியந்த அஜித், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அந்த திரைப்படத்தையும் போனி கபூரே தயாரிப்பார் என்பதும் கோலிவுட் வட்டாரங்கள் கூறும் கூடுதல் தகவல்.
Social Plugin