Ad Code

Responsive Advertisement

'ரஜினி'யையே காலி செய்த அஜித்துடன் மோதும் சூர்யா!!! அதிரடி அப்டேட் இதோ


விஸ்வாசம் திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பட வசூலையே முறியடித்த நடிகர் அஜித்துடன் மோத நடிகர் சூர்யா தயாராகி இருக்கிறார்.

K.V. ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, ஆர்யா, சாயீசா, மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் காப்பான். திரைப்பட பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், தாமதமாகி வந்த இந்த திரைப்படத்தின் டீசர் ஒருவழியாக ரிலீஸ் ஆகி இருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே, மிகப்பிரமாண்டமாகவும் அட்டகாசமாகவும் டீசர் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் தகவலும் இடம்பெற்று உள்ளது.

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படமும், ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படங்கள் மோதியதை போல மாபெரும் போட்டி இந்த இரண்டு திரைப்படங்களுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.