Ad Code

Responsive Advertisement

முறிந்தது காதல்... மீண்டும் சிங்கிளான ஸ்ருதிஹாசன்!!!


உலக நாயகன் கமலஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசனின் காதல் முறிவு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஸ்ரியா சரண், இலியானா, ப்ரியங்கா சோப்ரா ஆகியோரை போலவே, நடிகை ஸ்ருதி ஹாசனும், மைக்கேல் கோர்சல் எனும் வெளிநாட்டு நபரை காதலித்து வந்தார்.

இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது, மாப்பிள்ளை பெண் கோலத்தில் தன் தந்தையை சந்திப்பது என சுமூகமாக சென்று கொண்டிருந்த இவர்களது காதல் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.



இது குறித்த மறைமுக பதிவுகளை ஸ்ருதி பதிவிட்டு வந்த நிலையில், காதலர் மைக்கேலோ, இருவருக்கும் இடையேயான காதல் முறிவு குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன், இதன் பின்னரும் ஸ்ருதி தனக்கு நல்ல தோழியாக இருப்பார் என்றும் பதிவிட்டு இருக்கிறார்.