Ad Code

Responsive Advertisement

'திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை' - நடிகை ஸ்ருதிஹாசன் பளிச்


உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும், பிரபல திரைப்பட நடிகையுமான ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்த கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்து இருக்கிறார்.

மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் படிப்படியாக நுழைந்து வரும் நிலையில், பெரும்பாலான பாலிவுட் நாயகிகள் முற்றிலுமாக அவற்றை பின்பற்ற துவங்கிவிட்டனர்.

ஏற்கனவே பெரும்பாலான நடிகைகள், திருமணம் செய்து கொள்ளாமலே சக நடிகர்களுடன் குடும்பம் நடத்தியதையும் வெளிப்படையாக தெரிவித்திருக்கும் நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசனும் திருமணம் எனும் விஷயத்தில் நம்பிக்கை அற்றவராகவே தென்படுகிறார்.

Also Read | 'நயன்தாரா' பட விளம்பரத்திற்காகவே 'ராதாரவி'யை சிக்க வைத்தனர்.. பிரபல இயக்குனர் குற்றச்சாட்டு   

இவர் இங்கிலாந்தை சேர்ந்த நடிகரான, 'மைக்கேல் கோர்செல்' என்பவரை சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில், திருமணம் குறித்த கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது.

இதற்கு பதிலளித்து இருந்த ஸ்ருதிஹாசன், இப்போதைக்கு எங்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் இல்லை, அப்படி தோன்றினால் உடனே திருமணம் செய்து கொள்வேன் என பதிலளித்து இருக்கிறார்.