Ad Code

Responsive Advertisement

பத்திரிகையாளரின் ஏடாகூட கேள்வி...! மேடையில் கதறி அழுத ஸ்ரீதிவ்யா


வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் குடும்பப்பாங்கான பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை ஸ்ரீ திவ்யா.

அதன் பிறகு போதிய படவாய்ப்புக்கள் கிடைக்காத காரணத்தினால், தமிழ் திரைத்துறையை விட்டு மறைந்துவிட்ட இவர், மேடை நிகழ்ச்சியில் கதறியழுத சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் நடிப்பதோடு, கதாநாயகர்களிடம் கூட பேசாத கூச்ச சுபாவம் உடையவர் நடிகை ஸ்ரீ திவ்யா. நடிகர் சிவகார்த்திகேயனிடமே, காக்கி சட்டை திரைப்படத்தில் தான் நட்பாக பேச ஆரம்பித்திருந்த தகவலையும் முன்பு அவர் வெளியிட்டு இருந்தார்.

Also Read | திரிஷாவை போல அந்த இடத்தில் பச்சை குத்திய வீஜே ரம்யா.. 

இப்படிப்பட்ட அமைதியான குணம் படைத்தவரிடம், திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'திரைப்படத்தில் பார்க்க எடுப்பாக அழகாக இருக்கின்றீர்கள். ஆனால் நேரில் பார்க்க இவ்வளவு குள்ளமாக இருக்கிறீர்களே?' என ஏடாகூடமாக கேள்வி எழுப்ப, மேடையிலேயே கண்ணீர் விட ஆரம்பித்து விட்டாராம் ஸ்ரீதிவ்யா.

பின்னர் அந்த இடத்தையே பரபரப்பு தொற்றிக்கொள்ள, குறிப்பிட்ட பத்திரிக்கையாளரை பிறர் கண்டித்துடன், நடிகைக்கு ஆறுதல் கூறியும் அழுகையை நிறுத்தி இருக்கின்றனர்.