Ad Code

Responsive Advertisement

நாங்கல்லாம் அப்பவே அப்படி...! '30' வருடங்கள் கழித்து வைரலாகும் சிம்புவின் புகைப்படம்


திரைத்துறையில் வில்லங்க நடிகர் என பெயர் எடுக்கும் அளவிற்கு ஏடாகூடமான சர்ச்சைகளில் சிக்கி இருந்தவர் நடிகர் சிம்பு. தற்பொழுது நான் திருந்திவிட்டேன் என கூறிக்கொண்டு, சமூக அக்கறை கருத்துக்களை கூறி வந்தாலும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.

சமீபத்தில் கூட இவர் மீண்டும் ஹன்சிகாவை காதலிக்க ஆரம்பித்து இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இப்படி இருக்க 30 வருடங்களுக்கு முன்னதாக தான் குழந்தை நட்சத்திரமாக நடித்த, திரைப்பட புகைப்படத்தினை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Also Read | குடிபோதையில் காரில் பறந்த நடிகை..! வாகனங்களை இடித்து அட்டூழியம் 

தன் தந்தை இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் மழலை மாற சுட்டி பையனாக நடித்திருந்த சிம்பு, ஒரு காட்சியில் அவர் வயது குட்டி பெண்களுடன் ஜோடியாக போஸ் கொடுத்து இருப்பார்.

அந்த புகைப்படத்தினையும், சமீபத்தில் இவர் நடித்து வெளியான, வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில், கேத்தரின் தெரசா, மெகா ஆகாசுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு, தலைவர் அப்போதும், இப்போதும், எப்போதும் இப்படித்தான் என கலாய்த்து வருகின்றனர்.