தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் படி இருப்பதால், டிக்டாக் செயலியை தடை செய்ய கோரி, மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருபாகரன் மத்திய அரசிற்கு, டிக்டாக்கை ஏன் தடை செய்ய கூடாது என அதற்கான விளக்கத்துடன் பரிந்துரை செய்து இருந்தார்.
இது குறித்து பேசிய சீரியல் நடிகையும், 'டிக்டாக் பிரபலமுமான சரண்யா, முதலில் டிக் டாக் செயலியை ஏன் தடை செய்ய வேண்டும்? அந்த அளவிற்கு சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாக அந்த செயலி உள்ளதென்றால் தடை செய்யட்டும்.
ஆனால் இது போன்று வெவ்வேறு செயலிகள் வரும் அப்பொழுது என்ன செய்வீர்கள். பெண்கள் ஆபாசமாக வீடியோ வெளியிடுவதை காரணமாக சொல்கிறீர்கள். அது மட்டுமா இதில் பிரச்சனை? ஆண்கள் சிலர் அரிவாள், கத்தியுடன் சாதி சண்டைகளை பற்றி பேசி வருகின்றனர், அதெல்லாம் உங்களுக்கு தெரியவில்லையா?
இதெற்கெல்லாம் செயலியை தடை செய்வது தீர்வாகி விடாது. இது போன்று ஆபாசமாகவோ, சாதி சண்டைகள் தூண்டும் படி பதிவிடுபவர்களை தண்டிக்க சட்டம் இயற்ற பட வேண்டும்' என தனது கருத்தினை ஆவேசமாக தெரிவித்து இருந்தார்.
Social Plugin