Ad Code

Responsive Advertisement

தளபதி கொடுத்த விழிப்புணர்வு!!! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் விளம்பரம்!!!


பொழுதுபோக்கிற்கு மட்டுமல்லாது, பொது அறிவு சார்ந்த விஷயங்களையும் திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு சான்றாக அமைந்த திரைப்படம் சர்கார்.

தமிழக அரசியலில் மாபெரும் தலைவலியாக இருந்த கள்ளஓட்டு போடும் முறையை, முற்றிலும் ஒழிந்துவிடும் அளவிற்கு அத்திரைப்படம் விழிப்புணர்வு தகவல் ஒன்றினை அளித்திருந்தது.

அதாவது ஒரு வாக்காளரின் ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டுவிட்டால், தேர்தல் அதிகாரியிடம் தெரியப்படுத்தி, வாக்கு சீட்டின் மூலம் மறு  வாக்களிக்கும் சட்டமான, '49-P'யை மையமாக வைத்தே உருவாகி இருந்தது 'சர்கார்' திரைப்படம்.

இந்நிலையில் அத்திரைப்படத்தினை தொடர்ந்து தேர்தல் ஆணையமும், இச்சட்டம் குறித்து விளம்பரங்கள் வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள விளம்பரம் ஒன்றில், விஜயின் ஓட்ட கள்ளஓட்டாக போடும் யோகிபாபுவின் புகைப்படத்தை, எனக்கே விபூதி அடிக்க பார்த்தில்ல என்ற அவரது வசனத்துடன் வெளியிட்டு, 49-p குறித்து விழிப்புணர்வு செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்.