வடிவேலுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகர் சந்தானம். இப்பொழுது காமெடியனாக நடிப்பதை விட்டு முழு நேர நாயகனாகி இருக்கும் அவரது உடல் நிலை குறித்து ரசிகர்களை கவலைப்பட வைத்திருக்கிறது சமீபத்திய வீடியோ.
காமெடியனாக இருந்து நாயகனானது மட்டுமல்லாது, தனது தோற்றத்தையும் மாற்றி ரசிகர்களை கவர்ந்தார் சந்தானம். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்நிலையில், தனது மகளுடன் இணைந்து டப்மாஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர், சமீபத்திய வீடியோ ஒன்றில் மிகவும் மெலிந்து காணப்பட்டார். இதனால் ரசிகர்கள், சந்தானத்தின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Social Plugin