Ad Code

Responsive Advertisement

சொந்த தாயையே வீட்டை விட்டு துரத்த முயற்சி - நடிகை மீது போலீசில் புகார்


90'களின் இறுதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. சென்ற வருடம் கூட மிகுந்த பரபரப்புக்கு ஆளான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

இவர் மீது, தமிழ் நாடு மகளிர் ஆணையத்தில் அவரது தாயார் பானுமதி திடுக்கிட வைக்கும் புகார் ஒன்றினை அளித்திருக்கிறார். திருமணத்திற்கு பின்பு கணவர் க்ரிஷ் உடன் வசித்து வரும் நடிகை சங்கீதா, திடீரென அவரது தாயார் தங்கியிருக்கும் வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சங்கீதாவிற்கு, இரு சகோதரர்கள் உள்ள நிலையில், குறிப்பிட்ட சொத்தில் தன் அன்னை அவர்களுக்கும் பங்கு அளித்து விடுவாரோ என்ற சந்தேகத்தில் சங்கீதா இப்படி நடந்து கொள்வதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், இந்த நட்சத்திர தம்பதியினரை நேரில் ஆஜராகுமாறு, சம்மன் அனுப்பி இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு நியாயங்களை பற்றி பேசி இருந்ததாக கூறப்படுகிறது.