Ad Code

Responsive Advertisement

அழகே பொறாமை படும் பேரழகு...! துளி கவர்ச்சி இல்லாமலும் கவர்ந்த சாய்பல்லவி


நடிகை சாய்பல்லவி, கேரள ஸ்பெஷல் புடவையில் தோன்றி இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நிகழ்ச்சியில் நடனமாடி கவர்ந்திருந்தாலும், நாயகி ஆவதற்கு தமிழ் திரைத்துறையினர் எதிர்பார்த்த எந்த வித அம்சங்களும் இன்றி தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்டவர் சாய்பல்லவி. 

என்றாலும் 'மேக்கப்பின்றி, முகத்தில் பருக்களுடன் இருக்கும் நடிகைகளும் ரசிகர்களை கவர முடியும்' என்பதை நடு மண்டையில் ஆணி அடித்ததை போல நறுக்கென, பிரேமம் திரைப்படத்தின் மூலம் நிரூபித்து காட்டி இருந்தனர் மலையாள திரையுலகினர்.


இந்த வெற்றிக்கு பின்னர், மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படவாய்ப்புகளை பெற்று வரும் சாய்பல்லவி, மாரி 2 திரைப்படத்தின் 'ரௌடி பேபி' பாடலின் மூலம் வேறு லெவலுக்கு சென்று விட்டார்.

Also Read | சுட்டி பையனுக்கு லிப் கிஸ் அடித்த விஜய் டிவி ஜாக்லின்!!! வைரலாகும் புகைப்படம் 

இப்படி இருக்க, இவரது ரசிகர்களை மேலும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது சமீபத்தில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று. கேரள ஸ்பெஷலான ஓணம் புடவையில், மேக்கப்பின்றி தனது இயற்கை அழகுடன் அவர் தோன்றி இருக்கும் குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.