Ad Code

Responsive Advertisement

படப்பிடிப்பில் என்னிடம் சில்மிஷம் செய்தார்..! சீரியல் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


திரைத்துறையில் நடிகைகள் பலர் தங்களது நிகழ்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசி வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகையான ராணியும் அதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னதாக, பிராங்க் ஷோ எனப்படும் நிகழ்ச்சிகளுக்கு மதுரை நீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்பளித்தது. இதனை வரவேற்று பேசி இருந்த நடிகை ராணி, இப்படி பட்ட நிகழ்ச்சியால் தான் பட்ட கஷ்டம் குறித்தும் தெரிவித்து இருந்தார்.

அதில், ஒருமுறை சீரியல் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தபோது, நபர் ஒருவர், 'தான் உங்களது ரசிகர்' என கூறிக்கொண்டு செல்பி எடுத்துக்கொள்வது போல, தன்னை உரசியதாகவும், 'கோபமாக உனக்கு என்ன வேண்டும்' என்று திட்டிய போது, 'நீ தான் வேண்டும்' என கூறி விட்டு ஓடியதாகவும் தெரிவித்தார்.

அவரை பிடிக்க முற்பட்டபோதுதான் அது ஒரு பிராங்க் ஷோ, என தெரியவந்ததாகவும், இதனால் பெரும் மனவேதனை  அடைந்ததுடன் ஒருவாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலைக்க தள்ளப்பட்டேன் எனவும் ஆதங்கத்தோடு தெரிவித்து இருந்தார்.